Published on 16/06/2022 | Edited on 16/06/2022
எழுத்தாளர் அகிலன் அப்ரார் எழுதியுள்ள ‘ஐ.நா.வில் தமிழ்க் குரல்’ எனும் புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை(25ம் தேதி) மாலை ஐந்து மணிக்கு சென்னையில் உள்ள மியூஸிக் அகடாமி மினி ஹாலில் நடைபெறுகிறது.
இந்த நூலினை நக்கீரன் ஆசிரியர் வெளியிடுகிறார். நூலின் முதல் பிரதியை பவா. செல்லதுரை பெற்றுகொள்கிறார். இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் எம்.ஏ. முஸ்தபா தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியில், கவிஞர் சாக்லா வரவேற்புரையாற்றுகிறார். கவிஞர் யுகபாரதி, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரைஹானா, நீதியரசர் அக்பர் அலி, பேராசிரியர் ஹாஜாகனி, நடிகர் விமல், மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல், ஈரோடு மகேஷ், கலைமகன் முபாரக், நரேந்திரன் குமார், முகமது முனீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். ஐ.நா.வில் தமிழ்க் குரல் நூலாசிரியரும், எழுத்தாளருமான அகிலன் அப்ரார் நன்றியுரை ஆற்றுகிறார்.