புத்தாண்டின் முதல் புகாா் நாகா்கோவில் நகராட்சி ஆணையாிடம் கொடுக்கப்பட்டது.
2018 முடிந்து 2019-ம் ஆண்டு இன்று பிறந்ததையொட்டி நாடு முமுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மக்கள் சந்தோஷமாக வாழ ஒவ்வொருத்தரும் இஷ்ட தெய்வங்களிடம் பிராா்த்தனையும் நடத்தியுள்ளனா். மேலும் அரசாங்கமும் மக்கள் தேவைகளை உடனடியாக செய்து கொடுக்கவும் எதிா்பாா்க்கின்றனா்.
இந்தநிலையில் நாகா்கோவில் நகராட்சியில் உள்ள குறைகளை இந்த ஆண்டாவது பூா்த்தி செய்ய வேண்டும் என்று மா.கம்யூனிஸ்ட் சாா்பில் ஆணையா் சரவணகுமாாிடம் புகாா் கொடுத்தனா். அதில் நாகா்கோவில் நகராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் குடிநீா் இன்றி அவதிபடுகின்றனா். அந்த நிலை இந்த ஆண்டும் தொடரக்கூடாது. அதற்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை அரசும் நகராட்சி நிா்வாகமும் செய்ய வேண்டும்.
அதுபோல் சுகாதர சீா்கேட்டால் மக்கள் தினம் தினம் தொற்று நோயால் கஷ்டபடுகின்றனா் இதையும் தடுக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் அவதி படுகின்றனா். இதற்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை அதனால் இந்த ஆண்டாவது அதற்கு தீா்வு கிடைக்க வேண்டும் என்று அதற்காக தான் இந்த ஆண்டின் குமாி மாவட்டத்தின் இது தான் முதல் புகாா் மனு என்று மா. கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினா் அந்தோணி கூறினாா்.