Skip to main content

ஊரடங்கில் கவனிப்பார் இல்லாமல் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோர்; மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் போலீஸார்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

Women Inspector of Police


கரோனா தடை காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலமை மிகமோசமாகிவிட்டது. உணவு இல்லாமலும் உறவினர்கள் கவனிப்பு இல்லாமலும் போய்விட்டனர். அந்த வகையில் நாகையில் ஆதரவின்றி சுற்றிய பெண் ஒருவரை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்.
 


நாகப்பட்டினம் அடுத்துள்ள அக்கரைபேட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனிமையில் சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்குத் தகவல் வந்தது. இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதாவுக்கு அவரை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். ஆய்வாளரும், உதவி ஆய்வாளர் வேம்புவும் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு விசாரித்ததில் வேளாங்கண்ணி காவல் சரகத்திற்கு உட்பட்ட குறிச்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகள் என்பது தெரியவந்தது.

அதன் பின்னர் அந்தப் பெண்ணை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு கவனமுடன் பெண்ணை பார்த்துக்கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கிவிட்டு வந்துள்ளனர்.
 

Women Inspector of Police


இதேபோல கடந்த மாதம் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி தனது எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவின்றி இருந்த தனலட்சுமி என்ற 65 வயதுடைய மூதாட்டியைப் பத்திரமாக மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இரவு நேரமானதால் அருகிலிருந்த காப்பகத்தில் தங்க வைத்து, பின்னர் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி விசாரித்து அவரது ஊரான பனையூருக்குச் சென்று அவரது கனவர் ஆறுமுகத்திடமும் பிள்ளைகளிடமும் கூற அவர்களோ தாயை மனநலம் பாதிக்கப்பட்டவர் என ஏற்க மறுத்துவிட்டனர். அதன்பிறகு ஆய்வாளர் கோப்பெருந்தேவி அலட்சியபடுத்தாமல் நீடூரில் உள்ள தனலட்சுமியின் சகோதரி மற்றும் அவரது பெண் பிள்ளைகளிடம் மூதாட்டியை ஒப்படைத்தார்.
 


கரோனாவால் மனிதநேயமும் செத்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் கண்டிப்புடன் ஒப்படைத்துவரும் மனிதநேயமிக்க செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்