மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. 40 வயதுடைய தமிழ்மணி தனது கணவர் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து கீழவாடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்குவந்து அங்கேயே தங்கி வேலை செய்துவந்தார். அப்போது கொள்ளிடம் அடுத்துள்ள பாலூரன்படுகை கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்கிற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டு ஒன்றாகவே கனவன் மனைவியைபோல ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழ்மணியின் நடத்தையில் சந்தேகப்பட்ட செந்தில் அவரை கொலை செய்து வீட்டில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்தார். இந்த அதிர்ச்சி செய்தி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்து, காவல் துறைக்கு தகவல் அளித்தனர். போலீஸ் வருவதை தெரிந்துகொண்ட செந்தில் தப்பி ஓடி மூங்கில் தோப்பு ஒன்றில் மறைந்திருந்திருந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர்.
நாகை சிறைச் சாலையில் செந்தில் கழிவறைக்கு போவதாக கூறிச் சென்றவர் தனது உடலில் அணிந்திருந்த கைலியை கிழித்து கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கழிவறைக்குச் சென்ற சக கைதிகள் இதனை பார்த்து கூச்சலிட்டு சிறை காவலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து செந்திலின் உடலை கைப்பற்றி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.