







Published on 30/07/2021 | Edited on 30/07/2021
சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலியம்மன் கோயில் எதிரே நடுவங்கரை பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அகற்றப்பட்டு, அப்பகுதி மக்களுக்குப் பட்டாளம், புளியந்தோப்பு குடிசைமாற்று வாரியம் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நேற்றுமுதல் (29.07.2021), அங்கு வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீட்டு பொருட்களைக் காலி செய்து அரசு ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் செல்கின்றனர். மக்கள் முழுமையாக தங்கள் வீடுகளைக் காலி செய்தவுடன் அப்பகுதி இடிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.