Skip to main content

முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைப்பு

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
முன்விரோதம் காரணமாக குடிசைக்கு தீ வைப்பு



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லெட்சுமிபுரம் பகுதியில் வசிப்பவர் செல்வராஜ் இவருக்கும் இவரது உறவினருமான கண்ணன் என்பவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில் இன்று மதியம் இருவருக்கும் வாய் தகராறு நடந்துள்ளது. இதில் செல்வராஜ் கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வராஜ் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். இதையடுத்து குடிபோதையில் இருந்த கண்ணன் செல்வராஜின் குடிசை வீட்டிற்க்கு தீ வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

குடிசை வீடு என்பவதால் தீ மளமளவென பரவ தொடங்கியது உடனடியாக தீ அணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வருவதற்க்குள் வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றியும் எந்த பயனும் இல்லாமல் போனது. இதனுடைய மொத்த மதிப்பு 50 ஆயிரமாகும். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தலைமறைவாக உள்ள கண்ணனை இன்ஸ்பெக்டர் திலகவதி, எஸ்.ஐ வசந்தகுமார், பயிற்சி எஸ்.ஐ பாண்டிலெட்சுமி தேடி வருகின்றனர்.

-பாலாஜி

சார்ந்த செய்திகள்