
ஈரோடு மாநகராட்சியின் பகுதி கழக செயலாளர் கோவிந்தராஜ். இவர் ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கத்தின் உதவியாளராகவும் இருக்கிறார்.
கோவிந்தராஜ், ஒவ்வொரு நாளும் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தான் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாநகராட்சி துணை ஆணையாளர் அசோக்குமாரிடம் வாய்தகராறில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கவும் முனைந்துள்ளார். இந்த சம்பவத்தால், கொந்தளித்து போன மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிமுக நிர்வாகி கோவிந்தராஜ் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளதோடு கண்டன போராட்டமும் நடத்தினார்கள்.

ஆனால் அவர் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், இன்று ஒட்டு மொத்த மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் வேலைநிறுத்தம் செய்ததோடு போராட்டதிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டை தொடர்ந்து மற்ற மாநகராட்சி அதிகாரிகளும் போராட்டத்தில் குவிந்துள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன ஈரோடு அதிமுகவினர் எம்.எல்.ஏக்கள்., கே.வி.ராமலிங்கம் மற்றும் தென்னரசு ஆகியோர் அதிகாரிகளிடம் சமரசம் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. அதிமுக நிர்வாகி கோவிந்தராஜை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.