முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். பருவமழை ஏமாற்றியதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமல் இருந்தது. இதனால் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப் படாததால் விவசாயிகள் மானாவாரி பயிரிட ஆர்வம் காட்டினர்.
தற்போது கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாகவும், தென்காசி, குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் போன்ற பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினாலும் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. மீண்டும் மழை பெய்தால் நேற்றுவரை 26 78 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இன்று காலை அதை 3009 கன அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டமும் 130 புள்ளி 95 அடியை எட்டியுள்ளது அணையிலிருந்து ஆயிரத்து 700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மக்களும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுபோல் இந்த முல்லை பெரியார் அணை மூலம் பயன் அடைந்து வரும் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் முல்லை பெரியார் அணையின் நீர்வரத்து அதிகரித்து வருவதன் மூலம் விவசாயமும் நன்கு செழிப்படையும் என்றும் குடிநீர் பஞ்சமும் வராது என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள்.