Skip to main content

முளைப்பாரி திருவிழா; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

Published on 31/07/2024 | Edited on 31/07/2024
Mulaipari Festival; Thousands of women participated


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றான கொத்தமங்கலம் கிராமத்தில் எல்லைக் காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ள பிடாரியம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு கடந்த வாரம் கோயில் முளைப்பாரிக்கு விதை கொடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கோயில் முளைப்பாரிக்கு விதை தூவிய பிறகு கிராமத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு வீட்டிலும் மண் சட்டிகள், உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்தனர்.

தங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை அந்தந்தப் பகுதி மக்களும் தங்கள் குலதெய்வ கோயில்களில் வைத்து அலங்காரம் செய்து தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று மாலை ஊர்வலமாக தூக்கிச் சென்ற கிராம மக்கள் அனைவரும் மண்ணடித் திடலை சுற்று ஒன்று சேர்ந்து ஊர்வலமாகச் சென்று பிடாரியம்மன் கோயிலை சுற்றி வந்து பெரிய குளத்தில் விட்டனர்.

மேலும் முளைப்பாரியின் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியுடனும் அதனைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வந்து கலந்து கொண்டனர். எதிர்வரும் 7 ந் தேதி புதன் கிழமை மது எடுப்புத் திருவிழா நடக்கிறது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

சார்ந்த செய்திகள்