Skip to main content

எம். நடராஜனுக்கு முழு சம்மதத்தடன் உறுப்பு மாற்றம் நடக்கிறது அறந்தாங்கி அ.தி.மு.க ச.ம.உ பேட்டி

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
எம். நடராஜனுக்கு முழு சம்மதத்தடன் உறுப்பு மாற்றம் நடக்கிறது
அறந்தாங்கி அ.தி.மு.க ச.ம.உ பேட்டி



தினகரன் - எடப்பாடி அணிகளை இணைக்க சமாதான தூதுவராக செல்வதாக கடந்த மாதம் அறந்தாங்கியில் பேட்டி கொடுத்துவிட்டு அன்று மாலையே தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த அறந்தாங்கி அ.தி.மு.க ச.ம.உ ரெத்தினசபாபதி இன்று தனது தம்பியும் புதிய மா.செவுமான கார்த்திகேயன் மற்றும் பலருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்துவிட்டு வெளியே வந்து பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் கூறியதாவது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களை அகற்ற அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வந்ததால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவெடுத்து என்னிடம் வந்தனர். அதனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்கள் கோரிக்கையை முன் வைத்தோம். நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். அதனால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. 

அறந்தாங்கி மட்டுமின்றி மாவட்டத்திற்கு வந்த பொதுப்பணித்துறை நிதிகளை முதலமைச்சர் அவினாசி, அத்திக்கடவு பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டதாக அதிகாரிகளே சொல்கிறார்கள். பாரபட்சம் இன்றி நிதியை அனுப்ப வேண்டும். 

தினகரன் சென்னையில் இருக்கும் போது ஜனநாயக முறையில் துண்டறிக்கை கொடுத்தது தவறு என்று தேச விரோத வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மறியலோ போராட்டமோ செய்யல ஜனநாயக நாட்டில்  பேச, கூட உரிமை இல்லையா? பெரிய துரோகம்.

ஒ.பி.எஸ்.விட நாங்க ஒன்றும் தப்பு செய்யவில்லை. அவரையே ஏற்றுக் கொண்டு  துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கிறார்கள். நான் துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடம் பேசிய போது இணைய சம்மதம் தெரிவித்தார். அவர் தான் அ.தி.மு.க. ஆனால் எடப்பாடியிடம் 3 மணி நேரம் பேசினேன் அவர் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படமுடியாத கோரிக்கைகளாக இருந்தது. அதனால் தான் காலம் கடக்கிறது. மறுபடியும் தினகரன் அனுமதி பெற்று பேசவும் தயாராக இருக்கிறேன்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பொதுச் சொயலாளர், து.பொது செயலாளர் அனுமதி கொடுத்தால் கலந்து கொள்வேன். அனுமதிக்கவில்லை என்றால் கலந்து கொள்ளமாட்டேன். 

தினகரன் தனிக்கட்சி தொடங்குவது என்பது இல்லை. அவர் தான் அ.தி.மு.க. அவர் பின்னால் தான் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஜெ மரணம் பற்றி ஒவ்வொரு அமைச்சரும் ஒரு கருத்து சொல்கிறார்களே என்ற கேள்விக்கு.. அவர்கள் ஆளுக்கொரு கருத்து சொல்வதால் மனநோயாளிகளாக இருக்கிறார்கள்.

எம்.என். க்கு அறந்தாங்கி கூத்தாடிவயல் இளைஞர் கார்த்திக் உடல் உறுப்புகள் பெறப்படுகிறதா? குடும்பத்தினர் முழு சம்மதம் பெற்று நடக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட மா.செ கார்த்திகேயன்.. ஆபரேசன் முடிந்த பிறகு என்னிடம் கேளுங்கள் பிறகு முழுமையாக நான் சொல்கிறேன் என்றார். 

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்