சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து இந்து சமய அறநிலையத்துறைக் குழுவிடம் கொடுக்கப்பட்ட மனுக்களில் பெருமபாலானவை நிர்வாகத்தின் மீது குறைப்பாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்ற போது, அவர்களுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையக் குழு கூறிய, இந்த குற்றச்சாட்டை அடுத்து, கோயில் குறித்த குறைப்பாடுகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அறநிலையத்துறையிடம் கொடுக்கப்பட்ட 19,405 புகார்களில் 14,098 மனுக்கள் கோயில் நிர்வாகத்தின் மீது குறைப்பாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, குறைப்பாடுகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி, கோயில் நிர்வாகத்திற்கு விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.