Skip to main content

மான் வேட்டைக்கு வந்தவர்கள் வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு!! 

Published on 01/03/2020 | Edited on 01/03/2020

திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் உள்ள காப்புகாடு பகுதியில் மான்கள் மற்றும் காட்டுப்பன்றி வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனத்துறையினர், பிப்ரவரி 29 ந்தேதி அதிகாலை 1:50 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது இருவர், நாட்டுத்துப்பாக்கியுடன் பைக்கில் வேகமாக சென்றதை பார்த்த வனத்துறையினர் சம்பத், பாலாஜி இருவரும் அவர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றனர். பைக்கில் சென்றவர்கள் வனத்துறையினரை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 

Deer hunters shoot wildlife


இதில் 56 வயதான வனக்காவலர் சம்பத் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. மேலும், மற்றொரு வனக்காவலர் 22 வயதான பாலாஜி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். துப்பாக்கியால் சுட்டபடி பைக்கில் சென்ற இருவர் பாறை மீது மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அடிப்பட்ட வனத்துறை காவலர்கள் செல்போன் மூலமாக தகவல் சொல்ல தகவலறிந்த மற்ற வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடசேன் மற்றும் சிவசந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட இருவரும், கலசப்பாக்கம் அடுத்த மூலக்காடு கிராமத்தை சேர்ந்த 56 வயதான வெங்கடேசன், 22 வயது சிவசந்திரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்