நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மனநல ஆலோசகர் பாலியல் தொந்தரவு அளித்ததாக வெளியாகி இருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அடுத்துள்ள பால்பண்ணைச்சேரியில் 'அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம்' இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த காப்பகத்தில் தங்கி இருக்கும் 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளிடம் மனநல ஆலோசகரான சக்தியபிரகாஷ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வேம்பரசி தலைமையிலான போலீசார் மனநல ஆலோசகர் சத்யபிரகாசை கைது செய்துள்ளனர். அரசு குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.