புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் 33 அடி உயரம் கொண்ட பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை நடந்தது.
யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது சில கருடன்கள் வட்டமிட்டது. குடமுழுக்கு நடந்த போது சில கருடன்கள் வட்டமடித்துச் சென்றது. திரண்டிருந்த பக்தர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அதே போல மேக கூட்டங்களும் பஞ்சு போல திரண்டு நின்றது பக்தர்களைக் கவர்ந்திருந்தது.
தொடர்ந்து புனித நீர் ஊற்றப்பட்ட சிறிது நேரத்தில் 25 க்கும் மேற்பட்ட கருடன்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக வட்டமடித்ததைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். எந்தக் குடமுழுக்கு விழாவிற்கும் இத்தனைக் கருடன்கள் ஒன்றாக வந்ததில்லை ஆனால் பெரிய கோயிலுக்குத்தான் இத்தனைக் கருடன்கள் ஒன்றாக வந்துள்ளது என்றனர்.