Published on 30/06/2019 | Edited on 30/06/2019
மொய்விருந்து என்பதை தமிழக மக்கள் அறிந்திருந்தாலும் அது புதுக்கோட்டை தஞ்சை மாவட்டத்தில் சுமார் 300 கிராமங்களில் உள்ள மக்களுக்கு அது திருவிழா ஆகும். ஆடி பிறந்தாள் வழி பிறக்கும் என்பது இப்பகுதிக்கு மிகச் சரியாக பொருந்தும். அதாவது தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் பகுதி என சுற்றியுள்ள கிராமங்களில் தான் ஆடி மொய் திருவிழா நடக்கிறது. சில காரணங்களால் கீரமங்கலம் பகுதியில் ஆனி மாதமே மொய் திருவிழா தொடங்கியுள்ளது.
மொய் விருந்தில் கமகமக்கும் கறிவிருந்துடன் மக்கள் மொய் பணத்துடன் களமிறங்கி விட்டனர். இம்மாதம் தொடக்கத்தில் தொடங்கிய மொய் விருந்தில் ஒரு நாளைக்கு 2 டன் கறி விருந்துடன் ரூ 2 கோடி வரை வசூலாகிறது. கஜா புயல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மொய் வசூல் கடந்த ஆண்டுகளை விட குறைந்திருப்பதாக கூறுகிறார்கள் பொதுமக்கள்.