Published on 28/12/2018 | Edited on 28/12/2018

மதுரை, தோப்பூரில் 1,264 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. அதற்காக அடிக்கல் நாட்டுவதற்கு ஜனவரி 24 அல்லது ஜனவரி 27 அன்று பிரதமர் மோடி மதுரைக்கு வருவதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் அதன் பின்னர் மதுரையில் பிரமாண்ட பிரச்சார கூட்டத்திற்கும் பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. அந்த பிரச்சார கூட்டத்தில், தென் மாவட்டங்களில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.