Published on 22/04/2019 | Edited on 22/04/2019
சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சொன்னபடியே சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்டியிடுவார். மோடியின் நல்ல திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். அதே நேரத்தில் மோடிக்கு வாக்களிக்குமாறு ரஜினி கூறவில்லை. மே மாதம் 23ம் தேதிக்கு பின்னர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும். ரஜினி - கமல் நட்பு என்றைக்கும் நிலைக்கும்’’என்று தெரிவித்தார்.
