Skip to main content

தமிழகத்திற்குப் பிரதமர் மோடி பாராட்டு...

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

modi appreciates tamilnadu on corona precautionary measures

 

 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலமாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நேற்று மேற்கொண்டார். தமிழகம் சார்பாக இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், கரோனா தடுப்பு முயற்சிகளில் தமிழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தொலைப்பேசியில் முதல்வர் பழனிசாமியிடம் பேசிய பிரதமர் மோடி தமிழகத்தின் பணிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்