ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-கள் முன்பாக லட்சக்கணக்கான மக்கள் காத்துக்கிடந்ததும் பிரதமரின் அறிவிப்பு வெளியாகி, முதல் 50 நாள்களில் 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தது மக்களை வெகுவாகப் பாதித்த அந்த நடவடிக்கைக்காகப் பிரதமரை விமர்சித்தவர்களை, ‘ஆன்டி இந்தியன்’ என்று பி.ஜே.பி தலைவர்கள் முத்திரை குத்தினார்கள். தேச நலனுக்காவும், மக்களுக்காவும் விமர்சனம் செய்பவர்களை பிஜேபி தலைவர்கள் ஆன்டி இந்தியன் என்று விமர்சனம் செய்கிறார்கள்.
அப்படி தேச நலனில் அக்கறை கொண்ட ஆன்டி இந்தியன்கள் எல்லோரும் திருச்சியில் தேச நலன் காப்போம் மாநாடு நாளை திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டினை சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம் மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சி.பி.ஐ.(எம்) பொதுசெயலாளர் சீத்தாராம்யெச்சூரி, சி.பி.ஐ. பொது செயலாளர் ராஜா, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் வீரமணி, சி.பி.ஐ(எம்) மாநில பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னால் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், சி.பி.ஐ. பொதுசெயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர், இந்தியன் மூஸ்லீம்லீக் தேசிய தலைவர் காதர்மொஹிதீன், மனிதநேயமக்கள்கட்சி தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றுகிறார்கள்.
மாநாடு பொன்மலை ஜி கார்னர் இரயில்வே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான தேதி பல முறை அறிவிக்கப்பட்டு தள்ளி சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 23ம் தேதி நடைபெறுகிறது.
அ.தி.மு.க. தி.மு.க. பிஜேபி, என முக்கிய கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தி ஜி.கார்னர் மைதானத்தில் முதல் முறையாக விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் பிரமாண்டமான தேசம் காப்போம் மாநாடு நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.