வெற்றிவேல் தலைமையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆலோசனை
பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் தலைமையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அணிகள் இணைப்பு குறித்து ஓ.பி.எஸ். இன்று மாலை அறிவிக்க உள்ளார் என்று தெரிவித்தார். எடப்பாடி அணியில் இருந்து இரண்டு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று மதியம் சந்தித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி நடத்தினார். இந்த நிலையில் வெற்றிவேல் தலைமையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.