Skip to main content

11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு!

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு!

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டிடிவி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

எடப்பாடி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த பிப்.18ல் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது தனி அணி அமைத்து ஓபிஎஸ் தலைமையில் 11 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வந்தனர். இதையடுத்து ஆளுநரின் உத்தரவின்படி சட்டப்பேரவை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி அரசு ஆட்சியை தக்க வைத்தது.

ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்த போது தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் அதை எதிர்த்து தினகரன் தலைமையில் புதிய அணியை அமைத்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர். இந்தநிலையில் அரசு கொறடா ராஜேந்திரன் 18எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து 18எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து அரசாணை பிறப்பித்தார். இது தொடர்பாக திமுக சார்பில் ஓபிஎஸ் அணி எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் சட்டமன்ற கொறடா சங்கரபாணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல தற்போது டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

- ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்