வருகிற 24, 25ஆம் தேதி ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
இந்த மாநாடு திமுகவினருக்கு ஒரு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும். சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். மேலும், இந்த மாநாட்டு பணிகள் ஏறக்குறைய நிறைவு பெற்று வருகிறது.
சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை தவறவிட்டுவிட்டார் என்று பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார். அதனை வரவேற்கிறேன். சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள துணிச்சல், இங்குள்ள ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ்க்கு இல்லை. காவிரி விவகாரம், நீட் தேர்வு என எல்லாவற்றிலும் தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. இந்த துணிச்சல் இவர்களுக்கு இல்லை என்பது வேதனையாக உள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலம் இடிக்காமல் அமல்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள். சேது சமத்திர திட்டம் கலைஞரின் லட்சியம். திட்டத்தை நிறைவேற்றினாலே போதும். இவ்வாறு கூறினார்.