Published on 07/07/2021 | Edited on 07/07/2021
திருவாரூர் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் ஒன்றை திறந்துவைத்துள்ளார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் 4 அறுவை சிகிச்சை மையங்கள், 250 படுக்கை வசதிகள் உள்ளன.
மகப்பேறு குழந்தைகள் சிகிச்சைக்கான சிறப்பு தீவிர சிகிச்சை மையமாக புதிய கட்டடம் விளங்கும் என தெரிவித்த முதல்வர், காட்டூரில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதால் ஆட்சியர் காயத்ரிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.