
முதல்வர் பழனிசாமியை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க உள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், கடந்த 13 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்குத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். பல்வேறு மாநில ஆளுநர்கள், புதுவை முதல்வர் நாராயணசாமி, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன், ம.ஜ.க தமிமுன் அன்சாரி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வருக்கு தொலைப்பேசியில் இரங்கல் கூறி ஆறுதல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்திற்குச் சென்று நேரில் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.