இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்துதல் என கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்துவரும் நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய முதல்வர், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியதோடு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.