![MK Alagiri will soon join the alternative party - Minister Kadampur Raj speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/O_ZWlPbw6zIwZiA1P47mKJ2r9bc3grrcpm3ZxAfMc5o/1606756483/sites/default/files/inline-images/wet4.jpg)
அ.தி.மு.க.வின் மகளிர் வாக்குச் சாவடி முகவர் குழுவின் தென்மண்டல பொறுப்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ, நவ. 29 அன்று தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில், அ.தி.மு.க.வின் மகளிர் வாக்குச் சாவடி முகவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். தேர்தல் ஏற்பாட்டின் பொருட்டு கூட்டப்பட்ட, கூட்டத்தில் தொகுதியின் மகளிர் குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,
![MK Alagiri will soon join the alternative party - Minister Kadampur Raj speech](/modules/blazyloading/images/loader.png)
'மாஸ்டர்' படத்தை திரையரங்குகளில் வெளியிட முன்வந்த தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்று அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும். மகளிர் அனைவரும் பூத்வாரியாக உள்ள புதிய வாக்காளர்களின் ஆதார் கார்டுகளைச் சேகரிக்க வேண்டும். அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசுங்கள் வயது வித்தியாசம் பாராமல் புதிய வாக்காளர்களிடம் ஆதரவாகப் பேசி ஆதரவு திரட்ட வேண்டும். அதிக வாக்குகள் கிடைக்குமளவுக்குப் பணியாற்ற வேண்டும். அப்படி நீங்கள் செயல்பட்டால், வரப்போகும் தேர்தல்களில் பெண்களுக்கான வார்டு கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர்களில் வாய்ப்பு அளிக்கப்படும். மகளிர் குழுவினருடன் பாசறை நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும். மு.க.அழகிரி விரைவில் மாற்றுக் கட்சியில் இணைய உள்ளார். வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது என்றார்.
கூட்டத்தில் தொகுதி அமைச்சர் ராஜலட்சுமி, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.