Skip to main content

காரைக்கால் துறைமுகத்திற்கு எதிராக மா.ஜ.க. பெருந்திரல் போராட்டம்

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
nagoor

 

நிலக்கரி இறக்குமதியை நிறுத்தவேண்டுமென நாகூரில் மா,ஜ,க ஆர்பாட்டம் நடத்தியுள்ளது.

புதுவை மாநிலம் காரைக்காலில் "மார்க்" தனியார் துறைமுகம் இயங்கிவருகிறது. அங்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் நாகூர், பட்டினச்சேரி, பனங்குடி சுற்றுவட்டார மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிவருகின்றனர்.

 

துறைமுகத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பல வகை போராட்டங்களை நடத்தியுள்ளனர். நாகை எம்,எல்,ஏ தமிமுன் அன்சாரி , துறைமுக அதிகாரிகளிடமும், சட்டமன்றத்திலும் துறைமுகத்தான் நிகழும் ஆபத்துக்குறித்து  பேசியிருக்கிறார்.

 

கடந்த பிப்ரவரி 28 ல் நடந்த மஜக வின் 3 ஆம் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், ஏப்ரல் முதல்வாரத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து, கறுப்புக் கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அக்கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

 

இந்தநிலையில்  ஒருங்கிணைந்த நிலக்கரி இறக்குமதி எதிர்ப்புகுழுவை அமைத்து ஏப்ரல் 6 அன்று நாகூரில் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராட்டத்தில் நாம் தமிழர்கட்சி சீமான், மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்பு தலைவர் பேரா,ஜெயராமன், இயக்குனர் கெளதமன். நாகை முன்னாள் எம்,எல்,ஏ நிஜாமுதீன் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.

 

போராட்டத்திற்கு ஆதரவாக வணிக அமைப்புகள் மதியம் 2 மணி முதல் 7 மணி வரை அரை நாள் கடையடைப்பு நடத்தி ஆதரவு அளித்தனர்.  A.S அலாவுதீன் பேசும்போது நாகூர் மக்கள் நிலக்கரியால் படும் அவஸ்தைகள் குறித்தும் தமிமுன் அன்சாரி MLA எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்.

 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MGKநிஜாமுதீன் பேசுகையில், "நிலக்கரி இறக்குமதி தொடர்ந்தால், அடுத்து நாங்கள் வீரியமாக களமாடுவோம் ". என்றார்.

 

இயக்குனர் கெளதமனோ, தமிழ் நிலத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து பேசினார். மேலும் நாகூருக்கு தான் வந்தபோது நிலக்கரியால் பாதித்த மக்களின் துயரங்களை கேட்டதாக கூறி முடித்தார்.

 

சீமான் பேசும்போது, " மோடி அரசு தமிழக மக்களுக்கு எதிராக செய்துவருகிறது. மீத்தேன்,ஹைட்ரோகார்பன், என தமிழகத்தை சுரண்டும் திட்டங்களை தினிக்கிறது, இனியும் "மார்க்" துறைமுகம் நிலக்கரி இறக்குமதியை தொடர்ந்தால் கடுமையான போராட்டம் வெடிக்கும் "என எச்சரிக்கையோடு முடித்தார்.

பிறகு மெரினா போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ஜலீல் பேசினார்.

காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைய மூட வேண்டும்,  நியுட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவேரி டெல்டா மாவட்டங்களை "பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவிக்க வேண்டும் என ஐந்து தீர்மானங்களை கொண்டுவந்தனர்.

 

நிறைவாக பேசிய தமிமுன் அன்சாரியோ, "நான் சட்டமன்ற தேர்தலின் போது கூறியபடி, இதற்கான போராட்டக்களத்தை கட்சி வேறுபாடு, சாதி மத வேறுபாடின்றி இணைத்து உருவாக்கியுள்ளேன். இதில் ஒரு இடத்தில் கூட மஜக கொடியை காட்டவில்லை இதற்காக யார் போராடினாலும் அதை ஆதரிப்போம், இந்த போராட்டக்களத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் MGK நிஜாமுதீன் அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் தாங்கள் அவர் பின்னால் அணி திரள்வதாகவும், நாங்களும் களத்தில் இறங்குவோம் ".என்று  கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சூரை மீன்பிடித் துறைமுகத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Chief Secretary inspects suurai Fishing Port

 

சென்னை திருவொற்றியூரில் புதியதாக சூரை மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு ரூ. 200 கோடி மதிப்பீட்டில், மீன்வளம் மற்றும் நீர் வாழ் உயிரின உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி செவுள் வலை மற்றும் தூண்டில் மீன்பிடி விசைப் படகுகளுக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடித் துறைமுகத்தின் 95% பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் இன்று (14.10.2023) காலை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கள ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் எனவும், பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

 

மேலும் மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் ஆகிய கட்டடங்களின் அஸ்திவாரத்திற்குப் பயன்படுத்தப்படும் கம்பிகள் துருப் பிடிக்காமல் இருக்க எபாக்சி பூச்சு செய்து பயன்படுத்த வேண்டும் எனவும் கூடுதலாகத் தூர்வாரும் இயந்திரம் மற்றும் அஸ்திவாரத்திற்குத் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்துமாறும், கூடுதல் பணியாட்களைப் பயன்படுத்தி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் புதியதாகக் கட்டப்பட்டு வரும் திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழிக்குத் தேவையான இடத்தை பெருநகர சென்னை மாநகராட்சியிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

 

Chief Secretary inspects suurai Fishing Port

 

இந்த ஆய்வின் போது கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. இராதாகிருஷ்ணன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.எஸ். பழனிசாமி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தலைமைப் பொறியாளர் ராஜு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடனிருந்தனர். 

 


 

Next Story

60 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் கடத்தல்; தூத்துக்குடியில் பரபரப்பு

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

 potash fertiliser issue tuticorin harbour incident

 

ரஷ்யாவிலிருந்து 39 ஆயிரத்து 963 டன் எடையுள்ள பொட்டாஷ் உரம் ஏற்றிக் கொண்டு எம்விபேட் குளோரி என்ற கப்பல் கடந்த 14 ஆம் தேதியன்று தூத்துக்குடி துறைமுகம் வந்தது. பின்னர் அந்த பொட்டாஷ் உர மூட்டைகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் அவற்றைப் பிரித்து 120 டன் கொண்ட பொட்டாஷ் மூட்டைகள் 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த 4 லாரிகளும் உரிய குடோன்களுக்குச் செல்லாமல் திடீரென்று மாயமானது.

 

இது குறித்து கப்பலின் இறக்குமதி நிறுவனத்தின் மேலாளர் ஐயப்பன் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  அதனடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தியதில் கடத்தலில் ஈடுபட்ட 4 லாரிகளும் தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்த ராஜீவ் நகர் பகுதியிலுள்ள உப்பு குடோனில் மறைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து முத்தையாபுரம் காவல் நிலைய எஸ்.ஐ.சுந்தர் உள்ளிட்ட போலீஸ் டீம் ராஜீவ் நகர் குடோனை சோதனை செய்ததில் துறைமுகத்திலிருந்து 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்ட 120 டன் பொட்டாஷ் உரங்களை பிரித்து தரையில் கொட்டி அவற்றை 50 கிலோ வீதம் பிரபலமான உரக் கம்பெனிகளின் பெயரில் போலியான சாக்கு மூட்டைகளில் அடைத்து நெல்லை மாவட்டத்தின் களக்காடு விவசாய பகுதிகளுக்கு கடத்த முயன்றது தெரிய வந்திருக்கிறது.

 

மேலும் மூட்டை அடைக்கிற வேலைக்காக அந்தப் பகுதியில் உப்பள தொழிலாளர்களை இரண்டு மடங்கு கூலியின் அடிப்படையில் பணியமா்த்தியதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து போலீசார் 60 லட்சம் மதிப்பிலான பொட்டாஷ் உரங்கள் மற்றும் பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்பட்ட மெஷின்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். இந்த பம்பர் கடத்தல் தொடர்பாக முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாதவன் தூத்துக்குடி மதியழகன் உள்ளிட்ட இருவரைக் கைது செய்த போலீசார். தொடர்புடைய மேலும் மூன்று பேரைத் தேடி வருகின்றனர். துறைமுகத்திலிருந்தே கடத்தப்பட்ட இந்த பம்பர் கடத்தல் உப்பு நகரை பரபரப்பாக்கியுள்ளது.