Skip to main content

காணாமல் போன பள்ளி மாணவி! சாக்கு மூட்டையில் பிணமாக மீட்பு! 

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

Missing school student! Recovery of corpse in sack!

 

கோவை சரவணம்பட்டி அடுத்த யமுனா நகர் பகுதியில் புதரில் சாக்குமூட்டையில் கை, கால் கட்டப்பட்டு மற்றும் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட  நிலையில் பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளும் துப்புரவு பணியாளர் இன்று குப்பைகளை அள்ளி கொண்டிருக்கும்போது அங்கு உள்ள புதரில் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து மூட்டையின் அருகில் சென்று பார்த்தார். சாக்குமூட்டையில் ஒரு மனித உடல் இருப்பதை கண்டு அங்குள்ள பொதுமக்களிடம் கூறவே உடனே சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த சரவணம்பட்டி காவல்துறையினர், சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது வாய் துணி வைத்து அடைத்தும் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய ஒரு பெண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கடந்த சனிக்கிழமை அன்று சிவானந்தபுரம் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவரது 15 வயது  இரண்டாவது மகள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் சாக்கு மூட்டையில் இருந்த உடல் அவரது மகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

கடந்த 8 வருடங்களாக தனது கணவர் ராஜேந்திரனை பிரிந்து வாழ்ந்துவரும் கலைவாணி தனது இரு மகள்களுடன் மாருதி நகர் பகுதியில் கூலி வேலை செய்து வசித்து வருகிறார். இவர், கடந்த சனிக்கிழமை தனது 2வது மகள் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்திருந்த நிலையில், இன்று சாக்கு மூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சரணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்