Published on 20/12/2021 | Edited on 20/12/2021

திருச்சி மாவட்டத்தில் இன்று (20.12.2021) பல்வேறு இடங்களில் நேரடியாக மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை லால்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு. சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் ச. வைத்தியநாதன், மாவட்டப் பிரமுகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.