இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது.
95 ஆயிரம் வரை சென்ற தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, சில நாட்களுக்கு முன்பு 36 ஆயிரம் என்ற அளவிற்கு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் சென்றுள்ளது. இதனால், கரோனா குறையுமா அல்லது மீண்டும் அதிகரிக்குமா என்று தெரியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மாஸ்க் அணிந்தால் தமிழகத்தில் இருந்து கரோனாவை முழுமையாக விரட்டமுடியும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 1 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.