Published on 27/08/2020 | Edited on 27/08/2020
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ்களைக் கால நீட்டிப்பு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்குச் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மலைக் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்குச் சிறப்பான கல்விக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.