
“திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களையோ, இடங்களையோ விற்கபட்டிருந்தால், அதற்கான ஆதாரம் திரட்டி அந்த தீய செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அமைச்சர் சேகா்பாபு.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு இராஜகோபலசுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோயில் தீட்சிதர்களிடம் சக்கரத்தாழ்வர் சன்னதியை திறக்க வேண்டும், கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், தீட்சிதர்களான உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், "திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களையோ, இடங்களையோ விற்கபட்டிருந்தால் அதற்கான ஆதாரம் திரட்டி அந்த தீய செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2008ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் அறிவித்த அரசானை படி முதலில் திருக்கோவில் இடங்களை குழுவாக ஆக்கிரமைக்கப்பட்டவர்களை வாடகை தாரர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டபிறகு தான் அவர்களுக்கு வாடகை தாரர்களாக மாற்றிய பிறகு தான் அவர்களுக்குரிய நடவடிக்கை எடுக்கபடும்.

தமிழக அமைச்சரவை ஆய்வு கூட்டத்தில் ஊதியம் குறித்து கருத்து பரிமாறபட்டது. வருமானம் இருக்கின்ற திருக்கோவில்கள் வருமான இல்லாத திருக்கோவிலுக்கு வருமானத்தை பகிர்ந்து அளிக்க முடியாத நிலை உள்ளது குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. திருக்கோவில்களில் ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளர். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.