கமல் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய சப்பாணி குழந்தை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒரு தீய சக்தி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலஜி பேசுகையில்,
எம்.ஜி.ஆர் மக்களோடு இருந்து மாளிகை கண்டவர் ஆனால் கமல் மாளிகையிலிருந்து மக்களை பார்ப்பவர். தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல கமலஹாசன் நாடகம் நடத்துகிறார். அந்த நாடகம் தேர்தலுக்கு ஒத்துவராது.
நடிகர் கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய சப்பாணி குழந்தை. அது வளர்ந்தால் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெரிய ஆபத்து ஏற்படும். வெளிநாட்டு தீய சக்திகளோடு கமல் பயணிக்கிறாரோ என்ற சந்தேகம் அவர் மீது ஏற்படுகிறது என கூறினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நேற்று சென்னை தாம்பரத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வந்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் அமைச்சரின் இந்த சர்ச்சை கருத்து குறித்து பதிலளிக்கையில்,
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி எனவும், கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுக்கு பின் செல்லவில்லை எனவும் விளக்கமளித்தார்.