Skip to main content

அமைச்சர் பொன்முடியின் மகன் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தேர்வு

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

Minister Ponmudi's son selected as president of Tamil Nadu Cricket Association

 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் சிகாமணியை எதிர்த்து பிரபு என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பிரபு தனது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால் அசோக் சிகாமணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் நெடுங்காலமாக தேர்தல் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலை இருந்தது. இந்த ஆண்டு தலைவர் பதவிக்கு அசோக் சிகாமணி வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்ட நிலையில், எதிர்த்துப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பிரபு இன்று காலை நடைபெற்ற பொதுக்குழுவில் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றதால் அசோக் சிகாமணி போட்டியின்றி கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

கடந்த ஆண்டு வரை அசோக் சிகாமணி கிரிக்கெட் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். தலைவர் பதவியில் இருந்த ரூபா குருநாத் ராஜினாமா செய்த நிலையில் புதிய தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்