Published on 12/07/2021 | Edited on 12/07/2021

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. இதற்கிடையே தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது ஜிகா வைரஸ் தாக்கம் ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக கேரளாவில் இதுவரை 40க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரள எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறாரகள். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.