Skip to main content

குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

Published on 13/01/2022 | Edited on 13/01/2022

 

Minister KN Nehru inspects drinking water treatment plant

 

திருச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில், ரூபாய்  5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பல தட்டுகள் கொண்ட காற்று உலர்த்தி அமைப்பினை உள்ளடக்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டார். 

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆற்றை  நீராதாரமாகக் கொண்டு  தினமும் 135 மில்லியன் லிட்டர் குடிநீர் உந்தப்பட்டு மாநகரம் முழுவதும் 136 மேல் நிலை தீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செயப்பட்டு வருகிறது. 

 

Minister KN Nehru inspects drinking water treatment plant

 

கொள்ளிடம் ஆற்றில் இருந்து கலெக்டர் வெல் எண் -3 ல் இருந்து பெறப்படும் குடிநீர் கோ.அபிஷேகபுரம் கோட்டப்பகுதியில் அமைந்த 11 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது. இக்குடிநீரானது செந்நிறமாக  இருப்பதால் பொதுமக்களிடம்  இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து, குடிநீர்  வழங்கல் பொறியாளர்கள்  மற்றும் நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டம்  நடத்தப்பட்டடது.

 

அதன்படி, காவிரிக் கரையில் அய்யாளம்மன் படித்துறை அருகில்,  பலதட்டுகள் கொண்ட காற்று உலர்த்தி அமைப்பை உருவாக்கி, மேலும் இரும்புத்தாதுவை வடிகட்டி,  குடிநீரை  சுத்திகரிப்பு செய்யும்  நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள்  ரூ.5 கோடி மதிப்பீட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், செயற்பொறியாளர் பி.சிவபாதம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்