விருத்தாசலம் அருகே மினி டெம்போ கவிழ்ந்து 25 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எம்.புதூர் காலனியை சேர்ந்த 27 பேர், மினி டெம்போ எடுத்துகொண்டு பெரியநெசலூர் சக்கரபாணி இறந்த சடங்கிற்கு சென்றனர். திரும்பும் வழியில் வேப்பூர்க்கு அடுத்த சேப்பாக்கம் வரும் போது, எதிரே வந்த மாடு மேல் ஏற்றாமல் இருப்பதற்கு மினி டெம்போ டிரைவர் அப்பாதுரை வண்டியை வளைக்க முற்பட்டார். அப்போது எதிர்பாரத விதமாக மினி டெம்போ செயல்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மிகவும் 27 பேர் காயத்துடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் படுகாயம் அடைந்த 7 பேரை மேல்சிகிச்சைக்காக முண்டியாம்பாக்கம் கொண்டுசென்றனர். இதுகுறித்து வேப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்துவருகின்றனர்.
- சுந்தரபாண்டியன்