Published on 29/08/2019 | Edited on 29/08/2019
தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து புதுச்சேரியிலும் பால் விலை உயர்த்தப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 30 ரூபாயிலிருந்து 34 ரூபாய்க்கு உயர்த்தப்படுவதாக நாராயணசாமி தெரிவித்தார்.