Skip to main content

பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை

Published on 23/01/2018 | Edited on 23/01/2018
பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை

கீரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்த வெளிமாநில பெண்கள் உள்பட பலரிடம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

வெளிமாநிலத்தவர்கள் :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள் கிழமை இரவு 2 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட சுமார் 10 வெளிமாநிலத்தை சேர்ந்த இந்தி பேசும் நபர்கள் தாங்கள் வேலைக்காக வந்த இடத்தில் எங்களை தவிக்க விட்டு சென்றுவிட்டார்கள். உணவுக்கும், ஊருக்கு போகவும் பணமில்லை என்றும் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தனர். அந்த நபர்கள் மீது சந்தேகமடைந்த இளைஞர்கள் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலிசார் விசாரனை :
பேருந்து நிலையம் பகுதிக்கு வந்த போலீசார் வெளிமாநிலத்தவர்களை விசாரனை செய்ததுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை செய்தனர். 

மேலும் தமிழகத்தில் பல இடங்களிலும் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களில் வெளிமாநிலத்தவர்களின் பங்கு அதிகமாக இருப்பதால் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்தவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தோம் என்ற இளைஞர்கள் இதே கும்பல் ஞாயிற்றுக் கிழமை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் வசூல் செய்துள்ளனர் என்றனர்.


- பகத்சிங்
  


சார்ந்த செய்திகள்