
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு முதன்முறையாக திருச்சிக்கு இன்று (02.09.2018) இரவு 8.00 மணிக்கு விமானம் மூலம் வருகிறார். நாளை காலை முக்கொம்பில் உடைந்த கொள்ளிட அணையைப் பார்வையிடுகிறார்.
இதனால், மு.க.ஸ்டாலினை வரவேற்க விமானநிலையத்திற்கு வெளியே வரவேற்பு மேடை போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்டம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பெருந்திரளாக வந்து வரவேற்க தயார் ஆகி கொண்டு இருக்கிறனர். விமானநிலையத்தில் போடப்பட்டுள்ள மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின் என்று போடாமல் MKS என்று மு.க.ஸ்டாலின் என்பதை ஆங்கிலத்தில் சுருக்கிப் போட்டுள்ளார்கள். MGR பாணியில் MKS என்று எழுதியிருக்கிறார்கள்.
கருணாநிதி அவர்களைத் தலைவர் கலைஞர் என்று அழைத்தவர்கள் ஸ்டாலினைத் தமிழில் தலைவர் தளபதி என்று அழைக்கலாம். ஆனால் M.G.R. பாணியில் M.K.S. பொறுத்தமானதாக இருக்குமா என்பது போக போக தான் தெரியும் என்கிறார்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள்.