Skip to main content

புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா பதாகைகள் அகற்றம்

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா பதாகைகள் அகற்றம்

புதுக்கோட்டை நகரில் நாளை மறுநாள் 14ந் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது. அதற்காக சாலை சீரமைப்பு முதல் பல்வேறு பணிகளும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மா செ வைரமுத்து கண்காணப்பில் நடந்து வருகிறது. விழா முடியும் வரை எந்த துறையிலும் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று அந்தந்த துறை மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒ பி எஸ் அணியை சேர்ந்தவர்களை அமைச்சர் தாடர்ந்து புறக்கணிப்பதாக புகார் எழுந்த நிலையில் மாஜி கார்த்திக் தொண்டைமான் வீட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி அமைச்சர் படம் இல்லாமல் பதாகை வைப்பதுடன் ஒபிஎஸ் அணி தனியாக வரவேற்பு கொடுப்பது எனவும் முடிவு செய்தனர். (இன்றைய நக்கீரனில் செய்தி உள்ளது)

ஒபிஎஸ் அணி ஆலோசனைக் கூட்டம் முடிவுப்படி அமைச்சர் விஜயபாஸ்கர் படம் இல்லாமல் புதுகை நகரில் வைக்கப்பட்டது. அந்த பதாகைகளை கண்ட அமைச்சர் தரப்பினர் அமைச்சர் படம் இல்லாத பதாகைகளை நகர் முழுவதும் அகற்றி வருகின்றனர். இதனால் ஒ பி எஸ் அணியினர் அதிர்ப்தி அடைந்துள்ள நிலையில் 14 ந் தேதி புதுகை வரும் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒபிஎஸ் ஆகியோரிடம் நியாயம் கேட்க தயாராகி வருகின்றனர். 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பதாகைகள் அகற்றப்பட்டதால் புதுகை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும பதாகை வைப்போம் என்கின்றனர் ஒ பி எஸ் அணியை சேர்ந்தவர்கள்.

இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்