இந்து விரோதமாக பேசுவதற்கு பெயர் கருத்துரிமை இல்லை. நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தடையை மீறி 1.1.2020 மாலை 3 மணிக்கு மெரினாவில் போராட்டம் நடத்துவோம். அதாவது இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நானும் சேர்ந்து, நாங்கள் 4 பேர் இந்த இந்த போராட்டம் நடத்தவிருக்கிறோம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு கடந்த 29-ந் தேதி மேலப்பாளையத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாகவும் பாஜகவினர் புகார் தெரிவித்ததை அடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாகவும் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’இந்து விரோதமாக பேசுவதற்கு பெயர் கருத்துரிமை இல்லை. நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தடையை மீறி 1.1.2020 மாலை 3 மணிக்கு மெரினாவில் போராட்டம் நடத்துவோம். அதாவது இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நானும் சேர்ந்து, நாங்கள் 4 பேர் இந்த இந்த போராட்டம் நடத்தவிருக்கிறோம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.