மனைவி கழுத்தறுக்கப்பட்டு கொலை
மனநிலை பாதித்த கணவன் கைது
நெல்லை மாவட்டத்தின் குருவிகுளம் காவல் நிலைய சரகத்திற்குப்பட்ட ஆலடிப்பட்டி கிராமம். அங்குள்ள கூலித் தொழிலளியான கருப்பையா என்ற செல்லம், (62) அவரது மனைவி மூக்கம்மாள் (50) தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். இவரது மகன்களின் கருப்பன் என்பவர் ஊர்காவலப்படையிலிருப்பவர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுவது கணவர் கருப்பையா என்ற செல்லம் அடிக்கடி குடித்து விட்டு ஊர் சுற்றுவதைக் கண்டித்திருக்கிறார் மனைவி மூக்கம்மாள். தினந்தோறும் இரவு குடித்து விட்டு வரும் செல்லத்திற்கு இரவு நேரம் தொடர்ந்து தூக்கம் வராததால் அதன் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மன நிலையும் தடுமாற்றத்திலிருந்திருக்கிறதாம். இந்த நிலையில் நேற்று குடித்து விட்டு வந்த கருப்பையா என்ற செல்லம் பக்கத்து வீட்டில் படுத்தவர், காலையில் அதில் தீயை வைத்திருக்கிறார். அதைப் பக்கத்திலுள்ளவர்கள் கண்டித்து சப்தம் போட்டிருக்கின்றனர்.
இந்தச் சூழலில் தந்தையின் மன நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அவரது மகன் கருப்பன் கோவில்பட்டி தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக இன்று காலை அழைத்துச் சென்றிருக்கிறார். மருத்துவமனையில் இருக்கப் பிடிக்காத கருப்பையா என்ற செல்லம், அங்கிருந்து ஊருக்குத் திரும்பி வந்தவர் சுமார் ஒன்றரை மணிவாக்கில் திடீரென்று வீட்டிலிருந்த ஆடு அறுக்கும் அரிவாளைக் கொண்டு தன் மனைவியின் கழுத்தைக் கதறக் கதற அறுக்க, முழுவதுமாக அறுக்கப்பட்ட தலை தொங்கியிருக்கிறது. ரத்தம் கொப்பளிக்க மூக்கம்மாளின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்திருக்கிறது என்கிறார்கள். தகவலறிந்த ஸ்பாட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர் காளியப்பன். மற்றும் தனி சப்டிவிசன் தனிப் பிரிவு எஸ்.ஐ. தங்கராஜ் ஆகியோர் பிணத்தைக் கைப் பற்றி போஸ்ட் மார்ட்டத்திற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, கணவன் செல்லத்தைக் கைது செய்தவர்கள், மேல் விசாரணை நடத்தி வருகின்றார்கள். கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் அந்தச் சரகத்தில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
செய்தி : படங்களும் : ப.இராம்குமார்