குமாி மாவட்டம் பூதப்பாண்டி கிராமத்தில் 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ல் பிறந்த தோழா் ப.ஜீவானந்தம் மகாத்மாகாந்தியின் கொள்கையால் ஈா்க்கப்பட்ட அவா் தான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது காந்தியையும், கதரையும் பற்றி முதல் கவிதை எழுதினாா். தொடா்ந்து நாடக நடிகராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும், பொதுவுடைமை வாதியாகவும் 40 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு அதில் பல ஆண்டுகள் சிறையில் கழித்தாா்.
மேலும் பத்திாிகையாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த தோழா் ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தாா். அரசியலில் எதிரணியாக இருந்தாலும் காமராஜரால் பொிதும் மதிக்கப்பட்டவா். பொியாருடன் சோ்ந்து தீண்டாமைக்கு எதிராக போராடியவா். அவருடைய வாழ்வின் இறுதிநாளில் உடுக்க மாற்று உடை இல்லாமல் வறுமை நிலையில் வாழ்ந்த தோழா் ஜீவானந்தம் 1963-ல் ஜனவாி 18-ம் தேதி மறைந்தாா்.
ஜீவானந்தத்தின் 57-ஆவது நினைவு நாளையொட்டி இன்று நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள ஜீவானந்தம் மணிமண்டபத்தில் இருக்கும் திருவுருவ சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா். இதில் எம்.பி வசந்தகுமாா், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.