Skip to main content

மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார்

Published on 18/10/2017 | Edited on 18/10/2017
மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார்

ஏழைகள் மருத்துவம், கல்வி செலவுக்கு என 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சத்தை கலைஞர் நேற்று வழங்கினார். கலைஞர் அறக்கட்டளைக்கு திமுக தலைவர் கலைஞர் தந்த 5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதம்தோறும் ஏழை எளியவர்களுக்கு உதவித் தொகை கடந்த 2005 நவம்பர் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 5 கோடியில், 2007ம் ஆண்டு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு 1 கோடியை கலைஞர் வழங்கினார். மீதமுள்ள தொகைக்கான வட்டியில் உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாத வட்டி தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சத்தை  கலைஞர் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலை அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்