Published on 21/05/2021 | Edited on 21/05/2021
காட்டுமன்னார்கோயில் அருகே ஆயங்குடி கிராமத்தில் உள்ள மெடிக்கல் கடையில் காய்ச்சல், சளி என வரும் பொதுமக்களுக்கு ஊசி போட்டு வைத்தியம் பார்க்கப்படுவதாக சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனுக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் ராமதாசை சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் வட்டாட்சியர் ராமதாஸ், வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடையில் சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது மெடிக்கல் கடையில் காய்ச்சல், சளி என வரும் பொதுமக்களுக்கு ஊசி போட்டு வைத்தியம் பார்த்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடையை வட்டாட்சியரும் வருவாய்த்துறையினரும் சீல் வைத்து மூடினர்.