Published on 31/01/2019 | Edited on 31/01/2019

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பல வருடங்களாக துணை பொது மேலாளர் பதவியில் ராஜலிங்கம் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று நெய்வேலி முதலாவது விரிவாக்க சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக சுரங்கத்தில் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நெய்வேலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.