Skip to main content

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்; இன்று பதக்கம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியீடு! (படங்கள்)

Published on 11/10/2024 | Edited on 11/10/2024

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 10 ஆம் தேதி (10.09.2024) சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். அதன்படி மாவட்ட, மண்டல அளவில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என மொத்தம் 11 லட்சத்து 56 ஆயிரத்து 566 நபர்கள் 36 வகையான விளையாட்டு போட்டிகளில், 168 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, மாவட்ட மண்டல அளவில் வெற்றி பெற்ற 33 ஆயிரம் நபர்கள் பங்கு பெறும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளைத் துணை முதலமைச்சர் கடந்த 4ஆம் தேதி (04.10.2024) சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இன்று (11.10.2024) பதக்கம் பெற்றவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

சார்ந்த செய்திகள்