தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. ஜூன் 19-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் நீட் தேர்வு தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் (2018-19) மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்று விடுகிறது. 85 சதவீத இடங்களுக்கு தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் விண்ணப்பங்களை பெறலாம்.
www.tnhestyle="width:100%;height:100%;"h.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 18-ந்தேதி. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ்களுடன் வருகிற 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தபிறகு தரவரிசை பட்டியல் 28-ந்தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது.
படங்கள்: அசோக்குமார்