Published on 23/05/2022 | Edited on 23/05/2022

தமிழக அமைச்சரும், தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (23/05/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் மே 28- ஆம் தேதி அன்று தி.மு.க,வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளைக் கொண்டாடுவது தொடர்பாக, ஆலோசிக்கப்படவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.